பராமரிப்பு பணிக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அகற்றம்
பராமரிப்பு பணிக்காக கரூரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சிலை அகற்றப்பட்டது.
கரூர்,
கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே கடந்த பல ஆண்டு களுக்கு முன்பு சுமார் 12 அடி உயரத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்டு, கரூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் பரா மரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு முதல் சுபாஷ் சந்திரபோஸ் சிலையை சுற்றி பூங்கா உடன் கூடிய கம்பி வேலி அமைத்து அதனை தனியார் வங்கி ஒன்று பராமரிப்பு செய்து வந்தது. இந்தநிலையில் தற்போது சிலையின் பக்கவாட்டில் கழிவுநீர் வடிகால் செல்வதாலும், சிலை அமைத்து பல ஆண்டுகள் ஆவதாலும் சிலை சற்று கீழ் இறங்கும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பூங்காவிற்குள் செடி, கொடிகள் முளைத்து புதர்மண்டி காணப்பட்டது.
சிலை அகற்றம்
இதையடுத்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் சுபாஸ் சந்திரபோஸ் சிலையை சுற்றிலும் உள்ள புதர்மண்டி கிடக்கும் செடி கொடிகளை அகற்றி பரா மரிப்பு பணி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று காலை பூங்காவை சுற்றி பராமரிப்பு செய்வதற்காக சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதற்காக சாக்கு பைகள் மூலம் சிலை முழுமையாக மூடப்பட்டது. பின்னர் நவீன எந்திம் மூலம் சிலை பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story