உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழும் பெரம்பலூரில் வெங்காயம் விலை கடும் உயர்வு
உற்பத்தியில் முதன்மை மாவட்டமாக திகழும் பெரம்பலூரில் சின்ன, பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், ஓட்டல் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் பல்வேறு இடங்களில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் மொத்தமாக வாங்கி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்தும் காய்கறிகள் மொத்தமாக வாங்கப்படுகின்றன.
மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் கிடைப்பதாலும், விலையும் சற்று குறைவாக இருப்பதாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு இந்த மார்க்கெட்டையே நாடுகின்றனர்.
வெங்காயம் விலை கடும் உயர்வு
இந்நிலையில் மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலையை கேட்டால், அவற்றை உரிக்காமலேயே கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவால் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் வரத்து குறைவால் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. தற்போது சின்ன வெங்காயத்தின் உள்ளூர் வரத்தும் குறைந்திருக்கிறது. இதனால் விலை உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
வெங்காயத்தின் விலை உயர்வால் இல்லத்தரசிகள், ஓட்டல் அதிபர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முட்டைக்கோஸ்
வெங்காய விலை உயர்வால் பெரம்பலூரில் உள்ள பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் ஆம்லெட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் சேர்க்கப்படுகிறது. பல ஓட்டல்களில் வெங்காயம் இல்லாமலேயே பிளைன் ஆம்லெட்கள் மட்டுமே தயார் செய்து தருவதாக கூறுகிறார்கள். சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்ற துரித உணவு கடைகளிலும் வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ் அதிகமாக சேர்க்கப்படுகிறது. தயிர் பச்சடியில் வெள்ளரி, கேரட் துண்டுகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஓட்டல்களை நாடிச் செல்பவர்கள் வேறு வழியின்றி அதனை சாப்பிட்டு விட்டு செல்கின்றனர்.பெரம்பலூர் மாரியம்மன் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவை கிலோ ரூ.30-க்கும், கத்தரிக்காய், பாகற்காய், பச்சை மிளகாய், கேரட், முள்ளங்கி ஆகியவை கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய், சுரைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய் ஆகியவை கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் கிலோ ரூ.400-க்கும், மாங்காய் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.60 வரையிலும் விற்பனையாகிறது.

Related Tags :
Next Story