தமிழ்மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு கலெக்டர் ரத்னா வழங்கினார்


தமிழ்மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு கலெக்டர் ரத்னா வழங்கினார்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்மொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசு கலெக்டர் ரத்னா வழங்கினார்,

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, அரியலூரில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் ரத்னா தலைமையில் நடந்தது. பயிரலங்கில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள், மொழி பெயர்ப்பு கலை சொல்லாக்கம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, குறை களைவு நடவடிக்கைகள் ஆகிய தலைப்புகளில் தமிழ் அறிஞர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆட்சிமொழி கருத்தரங்கம் குறித்து அரசு அலுவலர்கள், தமிழறிஞர்கள் கருத்துரை வழங்கினர். மேலும் கடந்த 2017-ம் ஆண்டு அலுவலகத்தில் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகம்) கலெக்டர் ரத்னா பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

இதில் முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் தம்புசாமி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்ப்பெரியசாமி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) சித்ரா, ஓய்வு பெற்ற அகர முதலித்திட்ட இயக்குனர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் சாவித்திரி, அரியலூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தமிழ்மாறன், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் மாயகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story