கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு


கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 27 Nov 2019 7:34 PM GMT)

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் நவக்கிரக சாமி சிலைகள் கண்டெடுப்பு.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் முண்டனார் கோவில் படித்துறை அருகே அப்பகுதியை சேர்ந்த சிலர் குளிப்பதற்காக சென்றனர். அப்போது சில சாமி சிலைகள் மணலில் புதைந்து கிடந்ததை கண்டனர். பின்னர் அந்த சிலைகளை தோண்டி எடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த சிலைகளை மீட்டு திருமானூரில் உள்ள கைலாசநாதர் சிவன் கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். அந்த சிலைகள் கற்களால் வடிவமைக்கப்பட்ட நவக்கிரக சிலைகள் ஆகும். அந்த சிலைகள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏதோ ஒரு கோவிலில் வைத்து வழிபட்டுள்ளனர். நாளடைவில் அந்த சிலைகள் பழுதடைந்ததால் அதனை ஆற்றில் விட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆற்றங்கரையில் நவக்கிரக சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story