பெண் குழந்தைகளை ெபற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார்


பெண் குழந்தைகளை ெபற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார்
x
தினத்தந்தி 28 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு பரிசு பெட்டகங்களை கலெக்டர் எஸ்.சிவராசு வழங்கினார்.

திருச்சி,

சமூக நலத்துறையின் மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரதட்சணை தடுப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகஅளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது.

நடவடிக்கை

பாலின விகிதத்தை சரிசெய்யும் பொருட்டு கடந்த ஆண்டிலிருந்து கருக்கலைப்பிற்கான விவரங்கள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக சேகரிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் அதிக அளவு கருக்கலைப்பு செய்வது கண்டறியப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

பரிசு பெட்டகம்

இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு கலெக்டர் பரிசு பெட்டகங்களை வழங்கி்னார். மேலும் வரதட்சணை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு மற்றும் பாலின விகிதத்தை மேம்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுனிசா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story