'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி செலவில் அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைப்பு
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.6 கோடி செலவில் அங்கன்வாடி மையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியுள்ளார்.
சேலம்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9-ந்தேதி, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் ரூ.6 கோடி செலவில் மறு சீரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்படி சூரமங்கலம் மண்டலம் கோட்டத்திற்கு உட்பட்ட துரைசாமி லே-அவுட் பகுதியில் 3 மையங்கள், அவ்வை மார்க்கெட், அரிசிப்பாளையம் பகுதிகளில் உள்ள மையங்கள், காமராஜர் மண்டபம் அருகில் 2 மையங்கள் ஆகியவற்றில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே போன்று அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட வெங்கடப்பன் சாலை பகுதியில் ஒரு மையம், கோட்டை ஜலால்கான் தெருவில் 2 மையங்கள், ஆற்றோரம் தெருவில் ஒரு மையம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட ஆற்றோரம் தெருவில் ஒரு மையம், மார்க்கெட் தெரு மாநகராட்சி பள்ளியில் உள்ள ஒரு மையம், வெள்ளக்குட்டை உருது பள்ளியில் ஒரு மையம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதே போன்று குமரகிரி பேட்டை பகுதியில் ஒரு மையம், பெரிய கிணறு தெரு மாநகராட்சி பள்ளியில் 2 மையங்கள், பாவடி தொடக்கப்பள்ளியில் ஒரு மையம், சிமெண்டு் குடோன் பகுதியில் ஒரு மையம் என மொத்தம் 20 அங்கன்வாடி மையங்களில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள்
ஒவ்வொரு அங்கன்வாடி மையக்கட்டிடமும் 42.78 சதுர மீட்டர் பரப்பளவிலும், கழிவறைகள் 2.43 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் தரைப்பகுதிகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்படும். மேலும் சுற்றுச்சுவர் அமைத்து வளாகப்பகுதிகளில் பேவர் தளம் அமைக்கப்படும். அதே போன்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சிறுவர்களுக்கான பயோ-கழிவறைகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
சிறுவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து மையங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் விரைந்து முடித்து, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story