முதியோர் இல்லங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்


முதியோர் இல்லங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:00 AM IST (Updated: 28 Nov 2019 8:49 PM IST)
t-max-icont-min-icon

முதியோர் இல்லங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

கிரு‌‌ஷ்ணகிரி, 

தமிழகத்தில் மாநில அரசு நிதியுதவியுடன் முதியோர் இல்லங்கள், முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள், மத்திய அரசு நிதியுதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டம் மற்றும் ஸ்வதார் இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது. சமூக நலத்துறை மூலம் புதிய முதியோர் இல்லங்கள் தொடங்க உரிய சான்றுகளுடன் வருகிற 30-ந் தேதிக்குள் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். 

இதில், மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோர்களுக்கான முதியோர் இல்லங்கள் அமைக்க 5 பங்கு மாநில அரசு, ஒரு பங்கு தனியார் தொண்டு நிறுவனமும், ஒரு இல்லத்தில் 40 முதியோர்கள் வரை இருக்க வேண்டும். மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைக்க, 75 சதவீதம் மாநில அரசும், 25 சதவீதம் தொண்டு நிறுவனமும் என ஒரு இல்லத்தில் 25 முதியோர்கள் மற்றும் 25 குழந்தைகள் வரை இருக்கலாம்.

மத்திய அரசு நிதியுதவியுடன் மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின்கீழ் இயங்கும் முதியோர் இல்லங்கள், 90 சதவீதம் மத்திய அரசு, 10 சதவீதம் தனியார் தொண்டு நிறுவனம் என ஒரு இல்லத்தில் குறைந்தபட்சம் 25 முதியோர்கள் இருக்க வேண்டும். இந்த மூன்று இல்லங்களுக்கு, அறக்கட்டளை சட்டம், கம்பெனி சட்டம், சங்க சட்டத்தின் கீழ் பதிவுச்சான்று மற்றும் தற்போது வரை புதுப்பிக்கப்பட்ட சான்று உள்ளிட்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் ஸ்வதார் இல்ல திட்டத்தின்கீழ் இயங்கும் ஸ்வதார் இல்லங்களுக்கு 60 சதவீதம் மத்திய அரசு, 40 சதவீதம் மாநில அரசு என 30 பெண்கள் பயன்பெறும் வகையில் அமைத்திட வேண்டும். இதற்கு உரிய சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story