புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்


புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.1½ கோடி கடன் உதவி கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
x
தினத்தந்தி 29 Nov 2019 4:30 AM IST (Updated: 28 Nov 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.1½ ேகாடி கடன் உதவியை கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கருத்தரங்கு நாகர்ே்காவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

இதில் 19 புதிய தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியமாக ரூ.20 லட்சத்து 86 ஆயிரம் மானியத்துடன், ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா வழங்கி பேசினார். அப்ே்பாது அவர் கூறியதாவது:-

பொருளாதார மந்தநிலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, உலக பொருளாதாரத்தில் மந்தமான சூழ்நிலை ஏற்பட்டபோது இந்திய பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்கு, நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையும், இந்திய சந்தையும் மிக முக்கிய காரணமாக இருந்தது. உலகில் இந்திய சந்தை என்பது வணிகத்துறையில் மிக வேகமான வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு குறிப்பாக குமரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை ஏற்படுத்திட பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா வரவேற்று பேசினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்க தலைவர் கோபாலன், தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குனர் ஜெரினா பபி, மாவட்ட முன்ே்னாடி வங்கி மேலாளர் ராம்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர் ஜாண்பிரைட், ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட தொழில் மைய கிராம தொழில்கள் மற்றும் நிர்வாக மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.


Next Story