அனகாபுத்தூரில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீர் சாவு: தவறான சிகிச்சையால் இறந்ததாக போலீசில் பெற்றோர் புகார்
அனகாபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீரென உயிரிழந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்து உள்ளனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குன்றத்தூர் தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(வயது 23). இவர், படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே வேலை தேடி வந்தார். நித்யாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர் அவரை அனகாபுத்தூரில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கிருந்த டாக்டர், நித்யாவை பரிசோதித்து விட்டு ஊசி போட்டதாக கூறப்படுகிறது. அடுத்த சில நிமிடத்தில் நித்யா, அங்கேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி டாக்டர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர், அவரை பம்மலில் உள்ள வேறொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கும் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மீண்டும் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லும்படி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நித்யாவை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நித்யாவின் உயிர் பிரிந்து அரை மணி நேரமாகி விட்டதாக தெரிவித்தனர்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நித்யாவின் பெற்றோர், மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். தனியார் ஆஸ்பத்திரி டாக்டரின் அலட்சியத்தால்தான் தங்களது மகள் இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்கள் மகளுக்கு அனகாபுத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான் அவர் இறந்துவிட்டதாக குன்றத்தூர் போலீஸ் நிலையத்தில் நித்யாவின் பெற்றோர் புகார் செய்தனர். ஆனால் சம்பவம் நடந்தது சங்கர் நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனகாபுத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் என்பதால் சங்கர்நகர் போலீசில் புகார் செய்யும்படி கூறினர்.
அதன்படி நித்யாவின் பெற்றோர், சங்கர் நகர் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நித்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story