7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தப்படித்து ஆர்ப்பாட்டம்
திருவையாறில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தப்படித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தப்படித்தும், சங்கு ஊதியும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
ஒரு ஆண்டுக்கும் மேலாக அம்மையகரம் ஆதிதிராவிடர் தெருவிற்கு குடிநீர் வழங்கவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும்.
இதே கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அவற்றை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்.
கோஷங்கள்
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனி அய்யா, ராம், கிளை நிர்வாகிகள், ஒன்றிய கழக குழு நிர்வாகிகள் மற்றும் அம்மையகரம் கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தனர்.

Related Tags :
Next Story