அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி - கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது தண்டலம் கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கூவம் ஆற்றை கடந்துதான் காலம் காலமாக அவதியுற்றவாறு சென்று வருகின்றனர்.
மேலும் இந்த பகுதி மக்களுக்காக அரசு அதிகாரிகள் சாலை வசதி, பஸ் வசதி என இதர அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. ஓவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 17-ந்தேதியன்று அந்த பகுதி மக்கள் தண்டலம் கிராமத்தில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தமிழக முதல்-அமைச்சர், எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பலமுறை மனு அளித்தும் பொதுமக்கள் குறைகளை தீர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தண்டலம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று காலை 11 மணியளவில் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கையில் கோரிக்கை மனுக்களை ஏந்தியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு அனைத்திந்திய கைப்பூவேலை, எம்பிராய்டரி, கூலித்தொழிலாளி சங்கத்தின் மாநில தலைவர் ஆதித்தா தலைமை தாங்கினார். தண்டலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமானுஜம், குப்பம்மாள் ஏழுமலை, அமுதா ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
அவர்கள் திடீரென நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லதா, குலசேகரன் மற்றும் கடம்பத்தூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் காலம் காலமாக போராடி வரும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலை அனைவரும் புறக்கணித்து எங்களின் ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அரசிடமே ஒப்படைக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story