சித்தராமையா-குமாரசாமி மீது மானநஷ்ட வழக்கு ; முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை


சித்தராமையா-குமாரசாமி மீது மானநஷ்ட வழக்கு ; முதல்-மந்திரி எடியூரப்பா எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Nov 2019 11:30 PM GMT (Updated: 28 Nov 2019 8:54 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

பெங்களூரு, 

சித்தராமையா தனது பிரசார உரையில், தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா மற்றும் எடியூரப்பா விலைக்கு வாங்கியதாக குற்றம்சாட்டி வருகிறார். அதுபோல் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்கி கூட்டணி ஆட்சியை கவிழ்த்ததாக குற்றம்சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று எல்லாப்பூர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு அவர் பேசும்போது, “ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்கள் தற்போது எங்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள். அவர்களை நாங்கள் விலைக்கு வாங்கியதாக குமாரசாமி, சித்தராமையா பேசி வருவது சரியல்ல. அவர்களது குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தொடர்ந்து பேசினால், பா.ஜனதா சார்பில் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்“ என்றார்.

Next Story