குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து - பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளி கைது


குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து - பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 30 Nov 2019 3:45 AM IST (Updated: 30 Nov 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து பெண் குளிப்பதை படம் பிடித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் தனது செல்போனை படம் பிடிக்கும் வகையில் மறைத்து வைத்துவிட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்தபோது, செல்போன் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அந்த செல்போன் சுரேசுக்கு சொந்தமானது என்பதை அறிந்து அவரை கண்டித்துள்ளார். அப்போது சுரே‌‌ஷ் அந்த பெண்ணை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் மேலும் பல ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட சுரே‌‌ஷ், மேலும் சில வீடுகளுக்குள் சென்று, குளியல் அறைக்குள் செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்துள்ளார். அவ்வாறு பதிவு செய்த வீடியோக்களை அவர் யாருக்கும் பகிரவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருடைய செல்போனை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் விவரங்கள் தெரிய வரலாம்’ என்றார்.

Next Story