கட்டிட தொழிலாளியை கொன்ற வழக்கில் மகனுக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


கட்டிட தொழிலாளியை கொன்ற வழக்கில் மகனுக்கு 10 ஆண்டு சிறை - செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 4:00 AM IST (Updated: 30 Nov 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளியை கொன்ற வழக்கில் மகனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு, 

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கல்லுக்குட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஜெகன் (வயது 29). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். கடந்த 2014-ம் ஆண்டு ஜெகன் தனது தந்தையிடம் பூர்வீக சொத்து சம்பந்தமாக தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஜெகன் தனது தந்தையின் தலையில் சிமெண்டு கல்லை தூக்கிப்போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணன் துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் துரைப்பாக்கம் போலீசார் ஜெகனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமநாதன், ஜெகனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.

Next Story