உத்திரமேரூர் அருகே, சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
உத்திரமேரூர் அருகே சாலைகளை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ளது எல்.எண்டத்தூர் கிராமம். இங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் பலஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாலை அமைக்கும்போதே தரமாக அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிமெண்டு சாலையானது ஆங்காங்கே சேதம் அடைந்தது.
இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்யும் இடமாக மாறியுள்ளது. இதனால் இந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பொதுமக்கள் நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் சப்-இன்ஸ்பெக் டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர் களை கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story