அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு, முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு


அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசு, முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 29 Nov 2019 10:30 PM GMT (Updated: 29 Nov 2019 10:29 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.500 பரிசுத்தொகை வழங்க முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி, 

புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக்கோரி முழுஅடைப்பு போராட்டம் நடத்த அனைத்து தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில் அவர்களை அழைத்து அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ஜனவரி 10-ந் தேதிக்குள் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் பண்டிகைக்கால பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு 2019-20-ம் ஆண்டிற்கான பண்டிகை கால பரிசுத் தொகையாக அந்த சங்கத்தின் 29 ஆயிரத்து 720 உறுப்பினர்களுக்கு தலா ரூ.500 வீதம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.4.42 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடும்படி நல அமைச்சர் கந்தசாமியுடன் ஆலோசித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு அளித்துள்ளார்.

இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் பயன் அடைவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story