அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.25 லட்சத்தில் சூரிய மின்சக்தி மூலம் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்


அரசு தொடக்கப் பள்ளிகளில் ரூ.25 லட்சத்தில் சூரிய மின்சக்தி மூலம் ஸ்மார்ட் வகுப்புகள்: அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Dec 2019 4:15 AM IST (Updated: 1 Dec 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள 20 தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சூரியமின்சக்தி மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் திட்டத்தை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

காரைக்குடி, 

காரைக்குடி சத்குரு ஞானானந்தா மஹாலில், மாவட்டத்திலுள்ள 20 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.25 லட்சம் செலவில் அடிப்படை வசதிகளுடன் கூடிய சூரிய மின்சக்தி மூலம் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தும் திட்டத்திற்கான தொடக்க விழா ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு காரைக்குடி ஹெரிட்டேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் சேவியர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் உள்ள பிராஞ்பர்க் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த நாச்சியப்பன் திட்ட அறிமுக உரை நிகழ்த்தினார்.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

ரோட்டரி மாவட்ட ஆளுனர் ராஜகோபாலன், ரோட்டரி அறக்கட்டளை தலைவர் பெரியண்ணன் ஆகியோர் ஸ்மார்ட் வகுப்புகள் வழியாக கற்பிப்பதை தொடங்கி வைத்தனர். விழாவில் கலெக்டர் ஜெயகாந்தன், ரோட்டரி மாவட்ட மானியங்களுக்கான தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை ஆளுனர்கள் அருள் செழியன், சீனிவாசன், பெங்களூர் செல்கோ சூரிய மின்சக்தி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மோகன் பி ஹெக்டே ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் ஆவின் சேர்மன் அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், மாவட்ட பாம்கோ இயக்குனர் இயல்தாகூர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் தேவன், விவசாய பிரிவுச் செயலாளர் போஸ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுத்து, கல்வி அதிகாரிகள் தீனதயாளன், சாமி, சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தேவகோட்டை ரோட்டரி சங்க தலைவர் அந்தோணி சேவியர் நன்றி கூறினார்.

Next Story