தென்காசியில் அனைத்து கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்


தென்காசியில் அனைத்து கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2019 3:45 AM IST (Updated: 2 Dec 2019 6:00 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நேற்று அனைத்து கட்சியினர் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி, 

தென்காசியில் நேற்று காலை அனைத்து கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் கவுன்சிலர் ராசப்பா தலைமை தாங்கினார். தென்காசியில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் சீராக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது ஏராளமானோர் கண்களில் கருப்பு துணி கட்டி இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், துணை செயலாளர் சித்திக், செய்தி தொடர்பாளர் சந்திரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ராஜா முகமது உள்பட அனைத்து கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story