108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வுக்கான தொகையை வழங்க வேண்டும்


108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வுக்கான தொகையை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 9:02 PM GMT)

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வுக்கான தொகையை வழங்க வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

பெரம்பலூர்,

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வரதராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்று பேசினார். மாநில பொருளாளர் சாமிவேல் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். கம்யூனிஸ்டு ஒர்க்கர்ஸ் பார்ட்டியின் தென்னிந்திய பொதுச் செயலாளர் ஆனந்தன் சிறப்புரையாற்றினார். தொழில்நுட்ப தகவல் அறிக்கையை கோவை மண்டல குழு உறுப்பினர் முத்துப்பாண்டியும், செயல்திட்ட அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரனும் தாக்கல் செய்து பேசினர். அமைப்பு ரீதியான செயல்திட்டம், சட்டரீதியான செயல்திட்டம், தொழிற்சங்க கட்டமைப்பு செயல்திட்டம் குறித்து சங்கத்தின் நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து கோவை மண்டல தலைவர் சரவணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அறிவித்த 16 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வுக்கான தொகையையும், தீபாவளி போனஸ் ரூ.8,200-ம் முழுமையாக அனைத்து தொழிலாளர் களுக்கும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங் களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Next Story