மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு + "||" + Near Ranipet, Sand smuggling in the car Those who escaped the Hunt

ராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

ராணிப்பேட்டை அருகே, காரில் மணல் கடத்தல் - தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல் தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் அருகே சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்திய போது காரில் இருந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்த போது காரின் உள்புறத்திலும், பின்பகுதியிலும் 10 மூட்டைகளில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் மணல் மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி சாவு நாகமங்களா அருகே பரிதாபம்
நாகமங்களா அருகே கார்-வேன் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
2. காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது
நாகூரில் காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
3. பள்ளிபாளையம் அருகே கோவில் வேல்கள் மீது கார் மோதியது
பள்ளிபாளையம் அருகே கோவில் வேல்கள் மீது கார் மோதியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 7 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. பெண்ணாடம் அருகே, கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்
பெண்ணாடம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது நாசமானது.