மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது + "||" + Near Jolarpet, In the case of youth suicide 2 arrested

ஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது

ஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது
ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி குட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ் (வயது 29) இவர் பெங்களூருவில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வீட்டின் அருகே உள்ள நண்பரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜே‌‌ஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று நண்பர்களான புதூர் முத்தானூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (29), அன்பரசு (24) ஆகியோருடன் ராஜே‌‌ஷ் மது அருந்தியுள்ளார். அப்போது ராஜேசுக்கும், பிரசாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென பீர் பாட்டிலால் ராஜேசின் மண்டையில் பிரசாத், அன்பரசு ஆகியோர் அடித்து நீ உயிரோடு இருப்பது ‘வேஸ்ட்’, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானப்பட்ட ராஜே‌‌ஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பிரசாத் மற்றும் அன்பரசு ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. யுவராஜை ஜாமீனில் விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருக்க முயற்சி: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் 250 பேர் கைது
யுவராஜை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையினர் சங்ககிரியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க வந்த 250 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2. நாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம்; பெண் புரோக்கர் உள்பட 3 பேர் கைது
நாகர்கோவிலில் சொகுசு பங்களாவில் விபசாரம் நடந்தது தொடர்பாக பெண் புரோக்கர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பேனா விவகாரத்தில் பள்ளி மாணவி கொலை; 10 வயது மாணவி கைது
ராஜஸ்தானில் பேனா விவகாரத்தில் பள்ளி மாணவியை 10 வயது சக மாணவி கொலை செய்துள்ளார்.
4. போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்து ரூ.30 லட்சம் மோசடி திருச்சியை சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது
போலி ஆதார், பான் கார்டுகள் தயாரித்து ரூ.30 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தொடர்பாக திருச்சியை சேர்ந்தவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. தானிப்பாடி அருகே, சாராயம் கடத்திய 2 பேர் கைது - கார் பறிமுதல்
தானிப்பாடி பகுதியில் சாராயம் கடத்திய காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.