உளுந்தூர்பேட்டை அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி சத்யா(வயது 27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சத்யா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் துடித்த சத்யா தனது வீட்டின் உத்திரத்தில் தூக்கில் தொங்கினார். உடனடியாக அவரை தூக்கில் இருந்து இறக்கி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தார்.
இதுகுறித்து சத்யாவின் தாயார் சித்ரா உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.
Related Tags :
Next Story