கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தற்கொலை


கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2019 4:30 AM IST (Updated: 3 Dec 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி,

தென்தாமரைகுளத்தை சேர்ந்தவா் சுதன் (வயது 36), கொத்தனார். இவருக்கும், கன்னியாகுமரி வடக்கு குண்டலை சேர்ந்த ஜான்சி (34) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

தற்போது இவர்கள் வடக்கு குண்டலில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதன் கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

தற்கொலை

அப்போது அவரது மனைவி ஜான்சி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் சுதன் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார்.

அதே சமயத்தில், மனைவி திடீரென மாயமானதால் சுதன் விரக்தியில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு குண்டலில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள புளியமரத்தில் மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி மாயமான விரக்தியில் கொத்தனார் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story