மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருகே, விவசாயி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை + "||" + Near Thiruvannamalai Farmer Kill the cut Police are investigating

திருவண்ணாமலை அருகே, விவசாயி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை அருகே, விவசாயி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை
திருவண்ணாமலை அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தனலட்சுமி திருவண்ணாமலை அருகே தானிப்பாடியில் உள்ள விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இதனால் தனலட்சுமி திருவண்ணாமலையில் தங்கி உள்ளார்.

கணேசன் மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் உள்ள அவரது சொந்த நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலை போட்டு படுத்து அவர் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல்அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கணேசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் பயங்கரம்: அரசு ஊழியர் வெட்டிக் கொலை - போலீசில் 3 பேர் சிக்கினர்
புதுவையில் ஓடஓட விரட்டி அரசு ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3பேர் பிடிபட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. சகோதரர்கள் சண்டையை விலக்கிய போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட விவசாயி கைது
திருமானூர் அருகே சகோதரர்களுக்கு இடையே நடந்த சண்டையை விலக்கிய போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
3. திருக்கோவிலூர் அருகே, விவசாயி படுகொலை
திருக்கோவிலூர் அருகே விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
4. கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
பொம்மிடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.
5. கோவில் கட்டும் பிரச்சினையில் விவசாயி வெட்டிக்கொலை பதற்றம் நீடிப்பதால் போலீஸ் பாதுகாப்பு
திருமானூர் அருகே கோவில் கட்டும் பிரச்சினையில் விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.