புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் மரணம்


புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் மரணம்
x
தினத்தந்தி 4 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் நேற்று மரணமடைந்தார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் (வயது 71) . இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்தார்.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மரணமடைந்தார்.

உடனடியாக அவரது உடல் குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் தென்பெண்ணையாற்றின் கரையில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

2 முறை எம்.எல்.ஏ.

இவர் குருவிநத்தம் தொகுதியில் இருந்து 1985 முதல் 1990 வரையிலும், 1990 முதல் 1991 வரையிலும் தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி சந்தானலட்சுமி. இவரது மூத்த மகன் ராதாகிருஷ்ணன் புதுவை முன்னாள் எம்.பி. ஆவார். மேலும் கல்பனா என்ற மகளும், செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர்.

Next Story