மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Near Sriperumbudur Manager at the factory Suicide by hanging

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் பட்டுநூல் சத்திரம் பகுதியில் காசா கிராண்ட் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). இவருக்கு ரெஜினா என்கிற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். செல்வம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வந்தார்.


கடந்த சில நாட்களாக தொழிற்சாலை நிர்வாகம் பல்வேறு தொல்லைகளை செல்வத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் பகல் நேர பணியில் இருந்த செல்வத்தை நிர்வாகம் இரவு நேரபணிக்கு மாற்றியது. இதனால் செல்வம் மனஉளைச்சலில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அனைவரும் சென்றபின் தொழிற்சாலையில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதில் தன்னை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீபெரும்புதூர் அருகே தீயில் கருகி பெண் பலி சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார்
ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் போலீசில் புகார் செய்தார்.
2. ஸ்ரீபெரும்புதூர் அருகே நூதன முறையில் 15 பவுன் நகை கொள்ளை 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஸ்ரீபெரும்புதூர் அருகே நகை கடையில் நூதன முறையில் 15 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
3. ஸ்ரீபெரும்புதூர் அருகே கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் பொதுமக்கள் சமூக இடைவெளி இல்லாமல் குளிக்கின்றனர். இதனால் கொரானா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
4. ஸ்ரீபெரும்புதூர் அருகே, விதிமுறை மீறி இயங்கிய தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை - மதில் சுவர் ஏறி குதித்து தொழிலாளர்கள் ஓட்டம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊரடங்கின் போது விதிமுறை மீறி இயங்கிய தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையறிந்த தொழிலாளர்கள் மதில் சுவர் ஏறி குதித்து ஓடினர்.
5. ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பழைய இரும்பு கடையில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.