மாவட்ட செய்திகள்

தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் + "||" + Public roadblocks with drinking water in Thammampatti

தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
தம்மம்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தம்மம்பட்டி,

தம்மம்பட்டி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 9-வது வார்டில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினை பற்றி பொதுமக்கள் அலுவலர்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


இந்தநிலையில் நேற்று காலை 9-வது வார்டு பகுதி பொதுமக்கள் செந்தாரப்பட்டி - தம்மம்பட்டி சாலையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் சுமார் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது என கூறினர். அதற்கு செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. குலசேகரன்பட்டினம் அருகே, மண் அள்ள எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
குலசேகரன்பட்டினம் அருகே மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
சுடுகாட்டு நில ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. தடுப்பணை கட்ட மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட தடை
பக்ரீத் பண்டிகையையொட்டி பிவண்டி, பால்கரில் பொதுமக்கள் கூட்டம் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
5. கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.