மாவட்ட செய்திகள்

செப்டிக் டேங்க் கட்டும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு + "||" + When building a septic tank The wall collapses and the architect dies

செப்டிக் டேங்க் கட்டும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

செப்டிக் டேங்க் கட்டும்போது சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி சாவு
தூத்துக்குடியில் செப்டிக் டேங்க் கட்டும்போது, சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தாளமுத்துநகர் சகாயமாதாபட்டினத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ராஜ்(வயது 48). கட்டிட தொழிலாளி. இவர் சமீர்வியாஸ் நகரில் உள்ள முத்துவேல்ராஜா என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதற்காக 7 அடி ஆழ குழி தோண்டி உள்ளார். பின்னர் ஒரு பக்கம் முழுவதும் சுவர் கட்டி முடித்து உள்ளார்.

தொடர்ந்து மற்ற பகுதியில் சுவர் கட்டுவதற்கான பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, ஏற்கனவே கட்டிய சுவர் சரிந்து, குழியில் நின்று கொண்டு இருந்த ராஜ் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரி விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை; செப்டிக் டேங்கை உடைத்து ஆய்வு
கன்னியாகுமரியில் கடலில் கழிவு நீர் கலப்பதாக மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது செப்டிக் டேங்கை உடைத்து ஆய்வு செய்தனர்.