மாவட்ட செய்திகள்

கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க கூடாது - நாராயணசாமி வேண்டுகோள் + "||" + Including gutkha in stores Addictive stuff Don't sell - Narayanaswamy request

கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க கூடாது - நாராயணசாமி வேண்டுகோள்

கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க கூடாது - நாராயணசாமி வேண்டுகோள்
கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி, 

கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்வது புதுச்சேரியில் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடைகளில் எக்காரணம் கொண்டும் குட்கா போன்ற எந்த போதைப் பொருளையும் விற்கக்கூடாது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பதால் அவர்களது எதிர்காலத்தை வீணாக்குவதாக புகார்கள் வருகின்றன.

குட்கா விற்பவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவர் களின் எதிர்காலம் வீணாகி விடுகிறது என்பதை உணர்வதோடு போதை பொருளுக்கு அடிமையாவது தங்களது பிள்ளைகளாகவும் இருக்கலாம் என்ற உணர்வுடன் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.

இதுதொடர்பாக காரைக்காலில் குட்கா என்ற பெயரில் போதை பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே வியாபாரிகள் அனைவரையும் நான் வேண்டி கேட்டுக்கொள்வது எக்காரணம் கொண்டும் எந்தவிதமான கஞ்சா போன்ற போதைப்பொருட்களையும், குட்காவையும் விற்பனை செய்யக் கூடாது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைகளில் சோதனை செய்து குட்கா விற்பனை செய்வதை முழுவதும் தடை செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். எனவே வியாபாரிகள் கடைகளில் குட்கா போதைப்பொருள் எதையும் விற்பனை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊழல் புகாரினை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்ய தயார் - முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
ஊழல் புகாரினை நிரூபித்தால் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2. மாநில தேர்தல் ஆணையர் நியமனம் செல்லாது என்று கவர்னர் பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது - முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
மாநில தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து கவர்னர் வெளியிட்ட உத்தரவு சட்ட விரோதமானது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
3. புதுவையில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி - முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுவையில் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
4. ஆட்சியாளர்களுக்கு மக்கள் தான் எஜமானர்கள் - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
ஆட்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மக்கள் தான் எஜமானர்கள் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
5. மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்
மருத்துவ மாணவர்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.