வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் இடையே இயக்க ஏற்பாடு: ஆந்திராவில் இருந்து 3 மெட்ரோ ரெயில்கள் - சென்னை வருகை
சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோநகர் இடையே இயக்குவதற்காக ஆந்திராவில் இருந்து 3 மெட்ரோ ரெயில்கள் சென்னை வந்துள்ளன.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து 45 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து ரூ.3,770 கோடி மதிப்பில் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.051 கி.மீ. தூரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது.
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இயக்குவதற்காக கூடுதலாக ரெயில்கள் தேவைப்படுகிறது. இதனால் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு கடன் உதவியுடன் ரூ.200 கோடி மதிப்பில் 10 மெட்ரோ ரெயில்கள் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த நிறுவனத்துக்காக ஆந்திர மாநிலம் தடா அருகில் உள்ள ஸ்ரீ சிட்டியில் உள்ள உற்பத்தி மையத்தில் ரெயில்கள் தயாரிக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. முதல்கட்டமாக அங்கு தயாரிக்கப்பட்ட 3 ரெயில்கள் 12 பெட்டிகளுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை மெட்ரோ ரெயில் பணிமனைக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் விம்கோநகர் வரையில் புதிய பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்த பணி நிறைவடைய உள்ளது. இந்த பாதையில் இயக்குவதற்காக கூடுதல் ரெயில்கள் தேவைப்படுகிறது. இதற்காக ஒப்பந்தம் போடப்பட்ட 10 ரெயில்களில் தற்போது 3 ரெயில்கள் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த ரெயில்கள் பணிமனையிலும் மெயின் லைனிலும் மெதுவாகவும், வேகமாகவும் இயக்கி பார்த்து சோதனையிட உள்ளோம். தொடர்ந்து வழக்கமான இழுவை மற்றும் பிரேக் சோதனைகள், மின்சார எந்திர சோதனைகள் நடக்க இருக்கிறது.
மீதமுள்ள 7 ரெயில்களும் ஸ்ரீசிட்டியில் உள்ள உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அனைத்து ரெயில்களும் வந்து விடும். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story