திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2019 3:45 AM IST (Updated: 6 Dec 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது மீண்டும் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாத குமரேசன் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story