சிறுமிக்கு பாலியல் தொல்லை: ராமேசுவரம் போலீஸ் ஏட்டுவுக்கு 5 ஆண்டு சிறை


சிறுமிக்கு பாலியல் தொல்லை: ராமேசுவரம் போலீஸ் ஏட்டுவுக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 7:44 PM GMT)

வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராமேசுவரம் போலீஸ் ஏட்டுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் நகர் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சரவணன் (வயது 44). இவர் ராமேசுவரம் காந்திநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

ஏட்டு சரவணன் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி ராமேசுவரம் காவலர் குடியிருப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே வசித்த வீட்டின் அருகில் வசித்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சப்-இன்ஸ்பெக்டரின் மகளான 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாள்.. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சரவணன், அந்த சிறுமியிடம் பெற்றோரை விசாரித்தவாறே அவளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். இதுதொடர்பாக சிறுமியின் தாய், ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனை அறிந்த சரவணன் தலைமறைவானார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து சரவணனை தேடிவந்தனர். இதனிடையே பாலியல் புகார் காரணமாக அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் சரவணனை ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோ ர்ட்டில் நடைபெற்று வந் தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9,000 அபராத மும் விதித்து தீர்ப்பு கூறி னார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story