மாவட்ட செய்திகள்

கரூரில் துணிகரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு + "||" + Curry in Karur: 5½ pound dali chain seized by woman on scooter

கரூரில் துணிகரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு

கரூரில் துணிகரம்: ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
கரூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை 4-வது ெதரு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மனைவி வாசுகி (வயது 51). நேற்று முன்தினம் இவர், கரூர் மனோகரா கார்னர் அருகே கோவை-கரூர் சாலையில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென வாசுகியின் தாலி சங்கிலியை பிடித்து இழுத்தார். பின்னர் கையில் மாட்டிய 5½ பவுன் தங்க நகையுடன் அந்த வாலிபர் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.


போலீசார் வலைவீச்சு

இதற்கிடையே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த வாசுகி திருடன்... திருடன்... என அலறினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் துரத்தி சென்ற போதும் கூட அவரை பிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வாசுகியின் உறவினர் நகுல்சாமி புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சங்கிலியும், கயிறும்
எத்தனை தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், கயிறு களின் தேவையை குறைக்க முடியவில்லை. சங்கிலிகளின் பலனும் அவசியமாக இருக்கிறது. மனிதன் கயிறுகளையும், சங்கிலிகளையும் பயன்படுத்தியது மிக முக்கிய வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகும்.
2. நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்த 3 பேர் கைது
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 3 பேரை போலீசர் கைது செய்தனர்.
3. ராஜாக்கமங்கலம் அருகே மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
ராஜாக்கமங்கலம் அருேக நடந்து சென்ற மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் 5¼ பவுன் சங்கிலி பறிப்பு
கொல்லங்கோடு அருகே கடையில் இருந்த பெண்ணிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்து 5¼ பவுன் நகைைய பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. சேலத்தில், நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.