வேட்பு மனுக்கள் பெறப்படாததால் வெறிச்சோடிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்
உள்ளாட்சி தேர்தலுக்கு ேவட்பு மனுக்கள் ெபறப் படாததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தேனி,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கான தேர்தல் 2 கட்டமாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று (6-ந்தேதி) வேட்பு மனுக்கள் பெறும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், வேட்பு மனுக்கள் பெறுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் போதிய ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது.
காலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இதனால் வேட்பு மனுக்கள் பெறும் பணி உள்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் ஒன்றிய அலுவலகங்களில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். வேட்பு மனுக்கள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் வழக்கமான பணிகளும் அங்கு நடக்கவில்லை. இதனால், ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story