திருப்பத்தூரில் கொடிநாள் ஊர்வலம் - கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூரில் கொடிநாள் ஊர்வலத்தை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் சிவன்அருள் நிதியை வழங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களால் இயன்ற நிதி உதவியை வாரி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சப்- கலெக்டர் வந்தனாகார்க், திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன், கலெக்டர் அலுவலக மேலாளர் பாக்கியலட்சுமி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், பள்ளி மாணவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பத்தூர் வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story