தென்காசியில், நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய தேதிகளில் நடத்துவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் 2-12-2019 முதல் அமலில் இருந்தது.
தென்காசி,
தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 27-12-2019 மற்றும் 30-12-2019 ஆகிய தேதிகளில் நடத்துவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் 2-12-2019 முதல் அமலில் இருந்தது. தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்படி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி சுப்பா ராஜா திருமண மண்டபத்தில் நாளை (திங்கட்கிழமை) வழக்கம் போல் காலை 11 மணிக்கு நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது. மேலும் வருவாய் துறையினரால் நடத்தப்படும் மனுநீதி நாள் முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம் ஆகிய முகாம்களும் வழக்கம்போல் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story