குன்னூர் ஏல மையத்தில், ரூ.11 கோடியே 2 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம்


குன்னூர் ஏல மையத்தில், ரூ.11 கோடியே 2 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம்
x
தினத்தந்தி 9 Dec 2019 4:00 AM IST (Updated: 8 Dec 2019 9:12 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஏல மையத்தில்ரூ.11 கோடியே 2 லட்சத்துக்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.

குன்னூர், 

குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பின் சார்பில்வாரந்தோறும்வியாழன், வெள்ளி ஆகிய 2நாட்கள்தேயிலை ஏலம்நடத்தப்படுகிறது. இந்த ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்து கொண்டுதேயிலைத்தூளைஏலம் எடுத்து வருகின்றனர்.

விற்பனை எண் 49-க்கானஏலம் கடந்த 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 28 ஆயிரம் கிலோதேயிலைத்தூள்ஏலத்துக்கு வந்தது. இதில், 12 லட்சத்து 80 ஆயிரம் கிலோ இலைரகமாகவும், 5 லட்சத்து 48 ஆயிரம் கிலோடஸ்ட்ரகமாகவும்இருந்தது.

இந்த ஏலத்தில் மொத்தம் 13 லட்சத்து 94 ஆயிரம் கிலோதேயிலைத்தூள்விற்பனையானது. இது 73சதவீதம்ஆகும். விற்பனையானதேயிலைத்தூளின்மொத்த மதிப்புரூ.11 கோடியே 2 லட்சம் ஆகும்.

சி.டி.சி.தேயிலைத்தூளின்அதிகபட்சவிலையாக கிலோஒன்றுக்கு 271 ரூபாயாக இருந்தது.ஆர்தோடக்ஸ்தேயிலைத்தூள்கிலோவுக்கு 257 ரூபாய் என அதிகபட்ச விலையாக ஏலம் சென்றது. சராசரி விலையாக இலை ரகதேயிலைத்தூளின்சாதாரணவகை கிலோஒன்றுக்கு 62 ரூபாயில் இருந்து 66 ரூபாய் வரையிலும், முதல் ரகதேயிலைத்தூள்கிலோவுக்கு 105 ரூபாயில் இருந்து 124 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.

டஸ்ட்ரகதேயிலைத்தூளின்சாதாரணவகை கிலோவுக்கு64 ரூபாயில் இருந்து 68 ரூபாய் வரையிலும், முதல் ரகதேயிலைத்தூள்கிலோவுக்கு 112 ரூபாயில் இருந்து 126 ரூபாய் வரையிலும் ஏலம் சென்றது.விற்பனை எண் 50-க்கானஏலம் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 57 ஆயிரம் கிலோதேயிலைத்தூள்வருகிறது.

Next Story