கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் மீண்டும் சேதம்
கிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் மீண்டும் சேதம் அடைந்தன.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன் பேரில் ஆந்திர அரசு நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் என்று 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரம் வரை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்கிறது. 1984-ம் ஆண்டு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு முதன் முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் 28-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. தண்ணீர் திறப்பை கருத்தில் கொண்டு ஏற்கனவே சேதம் அடைந்திருந்த கிருஷ்ணா நதி கால்வாய் ரூ.50 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சராசரியாக 800 கனஅடி வீதம் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஜங்காலபள்ளி, தொம்பரம்பேடு, அம்பேத்கர்நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உட்பட 25 பகுதிகளில் கிருஷ்ணா நதி கால்வாயின் கரைகள் மீண்டும் சேதம் அடைந்துள்ளன.
கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்துவிடும் போதும் இவ்வாறு கரைகள் சேதம் அடையும் சம்பவங்கள் தொடர்கின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் சேதம் அடையும் பகுதிகளை கண்டறிந்து அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகள் சேதம் அடையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story