திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2019 4:30 AM IST (Updated: 9 Dec 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு, 

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வாய்ப்பு மறுக்கப்பட்டது

கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இதில் 13 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கியது. 2 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜனதாவுக்காக ராஜினாமா செய்த ரோஷன் பெய்க், சங்கருக்கு டிக்கெட் வழங்காதது சரியல்ல. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா சொல்கிறார். என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்க்கிறோம்.

ராமநகரை தூய்மைபடுத்துவதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறுகிறார். ராமநகரில் இருந்து வெற்றி பெற்று தேவேகவுடா பிரதமரானார். குமாரசாமி 2 முறை முதல்-மந்திரியானார். நான் மற்றும் பி.ஜி.ஆர்.சிந்தியா ஆகியோர் மந்திரியானோம். எங்களால் முடியாததை, செய்வதாக அஸ்வத் நாராயண் சொல்கிறார். அவருக்கு நல்லது நடக்கட்டும்.

அனுமதிக்கவில்லை

டெல்லி திகார் சிறையில் இருந்தபோது ப.சிதம்பரத்தை பரஸ்பரம் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை. ஆஸ்பத்திரிக்கு வரும்போது, முகத்தை பார்த்துக் கொண்டோம். சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நோக்கத்தின் அடிப்படையில் டெல்லியில் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேசினேன்.

கனகபுராவுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ கல்லூரியை வேறு இடத்திற்கு மாநில அரசு மாறிவிட்டது. இது சரியல்ல. அதனால் கனகபுராவில் மருத்துவ கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்வார் என்று நான் கருதுகிறேன். சட்டசபையில் இதுகுறித்து பிரச்சினையை கிளப்புவேன்.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Next Story