மழையால் அழுகி நாசமான வெங்காய பயிர் - விவசாயிகள் கண்ணீர்


மழையால் அழுகி நாசமான வெங்காய பயிர் - விவசாயிகள் கண்ணீர்
x
தினத்தந்தி 9 Dec 2019 12:43 AM IST (Updated: 9 Dec 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் நடப்பட்ட வெங்காயம் மழைநீரில் அழுகிப் போனது. அதை சாலையில் வீசும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரபத்தி, குசவன்குண்டு, வலையன்குளம், வலையப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் வெங்காயம் பயிரிட்டு வருகிறார்கள்.

பெரும்பாலானவர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பாத்தி கட்டி முழுக்க முழுக்க விதை வெங்காயத்தை நட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். சிலர் வெண்டை உள்ளிட்ட பயிர்களுக்கு இடையே ஊடு பயிராக வெங்காயம் நட்டுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்திய தொடர்மழையால் வெங்காயம் விவசாயம் செய்யப்பட்ட தோட்டங்களில் மழை நீர் தேங்கி பூமிக்கடியில் உள்ள வெங்காயம் வெம்பி அழுகியது. அதை கண்டு விவசாயிகள் கண்ணீர் சிந்துகின்றனர். அழுகிய வெங்காயத்தை சாலையில் வீச வேண்டிய நிலை இருக்கிறது.

எனவே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள விவசாயதுறை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட்டு அரசிடமிருந்து நிவாரணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். எனினும் அதிகாரிகள் பார்வையிட வராததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வலியுறுத்தியுள்ளனர்.

Next Story