உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை குறைதீர்க்கும் முகாம் ரத்து - கலெக்டர் அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை குறைதீர்க்கும் முகாம் ரத்து - கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2019 10:45 PM GMT (Updated: 2019-12-09T00:50:09+05:30)

உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருயுள்ளதாவது:-

சிவகங்கை,

தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தினால் ஊரக உள்ளாட்சித்தோ்தல் நடைபெறுவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டிதோ்தல் நன்னடைத்தை விதிகள் நடைமுறை உள்ளது.

நன்னடத்தை விதிகள் அமல் வாபஸ் பெறும்வரை, உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஒவ்வோரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் கோரிக்கை தொடா்பான மனுக்கள் அளிக்க விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம். அதேபோல் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story