கள்ளக்குறிச்சி, மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை


கள்ளக்குறிச்சி, மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2019 4:15 AM IST (Updated: 9 Dec 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டலத்தில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாகும். இந்த அணையின் மூலம் கானாங்குறிச்சி, வாணியந்தல், பெருவங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கு மழைக்காலங்களில் கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகும் மணி மற்றும் முக்தாஆறுகளில் இருந்து தண்ணீர் வரும். மேலும் பாப்பாக்கல் ஓடையில் இருந்தும் மழைநீர் வரும். கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யாத காரணத்தால் மணிமுக்தா அணை வறண்டது.

இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். ஆனால் இந்தாண்டு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இந்த மழை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது.

இதனால் தண்ணீர் வரத்தொடங்கியதால் மணிமுக்தாஅணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 30 அடியாக உள்ளது. அணையில் தண்ணீர் இருந்தும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் இருந்து பொதுவாக பாசனத்துக்காக அக்டோபர் மாத இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் தண்ணீர் திறக்கப்படும். அதனை பயன்படுத்தி நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். கடந்த ஆண்டு போதிய அளவுக்கு பருவமழை பெய்யாததால் தண்ணீர் இன்றி அணை வறண்டது. இதனால் நாங்கள் சாகுபடி செய்திருந்த நெற் பயிர்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டதால் பயிர்கள் தண்ணீரின்றி கருகியது.

இதன் காரணமாக எங்களுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்தாண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்த பருவ மழையால் மணிமுக்தா அணையின் நீர் மட்டம் தற்போது 30 அடியாக உள்ளது.

இதனால் மிகந்த மகிழ்ச்சியுடன் சம்பா சாகுபடியை நாங்கள் தொடங்யுள் ளோம். இருப்பினும் இந்தாண்டு இது வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாததால் நடவு பணிக்கும், நடவு செய்த பயிா்களுக்கும் தேவையான அளவுக்கு தண்ணீரை எங்களால் பாய்ச்ச முடியவில்லை. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன் கருதி மணிமுக்தா அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.

Next Story