களக்காடு அருகே மனைவி கல்லறையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
களக்காடு அருகே மனைவி கல்லறையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு,
களக்காடு அருகே மனைவி கல்லறையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயி
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 60) விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இவரது மனைவி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சாந்தகுமார் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சாந்தகுமாா் தனது வீட்டில் உள்ளவர்களிடம் தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் தோட்டத்திற்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள தனது மனைவியின் கல்லறைக்கு சென்றார். அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சாந்தகுமாரின் மகன் பாலசிங் என்பவர் களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். களக்காடு அருகே மனைவி கல்லறையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story