ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம் பொதுமக்கள் நாயை அடித்துக் கொன்றதால் பரபரப்பு
ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வெறிநாயை அடித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே வெறிநாய் கடித்து 15 பேர் காயம் அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வெறிநாயை அடித்துக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 பேர் காயம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் தேன் பாப்பா (வயது 47), மாலதி (32), அவருடைய மகன் சுஜின் (9), சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி (40), செல்வக்குமார் மகள் ஸ்ரீஹாசினி (10), ராஜலிங்கம் (44), சாரதா (45), பஞ்சு மகன் ராஜா (8), பால்ராஜ் மகன் பிரவீன் (8) உள்பட 15 பேர் அந்த பகுதிகளில் தங்களது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த ஒரு வெறிநாய் தேன் பாப்பா உள்பட 15 பேரையும் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த அவர்களில் 9 பேர் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியிலும், 6 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
நாயை கொன்ற பொதுமக்கள்
இதற்கிடையே இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த வெறிநாயை விரட்டிச் சென்று அடித்துக் கொன்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story