போலீஸ் வாகனம் ேமாதி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கக்கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


போலீஸ் வாகனம் ேமாதி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதி வழங்கக்கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2019 3:15 AM IST (Updated: 9 Dec 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், நேற்று திரிகூடபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அச்சன்புதூர், 

கடையநல்லூர் அருகே கடந்த மாதம் திரிகூடபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ் வாகனம் மோதியதில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மல்லிகா என்ற ஆயி‌ஷாபீவி (வயது 39), அவருடைய மகள் இர்பானா ஆசியா (15) மற்றும் கண்சாள் மஹரிபா பீவி (40) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதில் ஆயி‌ஷாபீவி இறந்ததற்குமட்டும் அரசு சார்பில், ரூ.3 லட்சம் நிதிஉதவி அவரது குடும்பத்தினரிடம்வழங்கப்பட்டது. மற்ற 2 பேருக்கு நிதி உதவி அளிக்கப்படவில்லை. இதனை கண்டித்தும்,விபத்தில் இறந்த மற்ற 2 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கக்கோரியும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், நேற்று திரிகூடபுரம் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story