திருவொற்றியூரில் ஓட்டல், பழைய இரும்பு கடையில் தீ விபத்து
திருவொற்றியூரில் ஓட்டல், பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் ஜோதிநகர் பஸ் நிறுத்தம் எதிரே மணலி விரைவு சாலையோரம் ஜெயராஜ் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடையும், சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான ஓட்டலும் உள்ளது.
நேற்று மதியம் திடீரென பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அருகில் இருந்த ஓட்டலுக்கும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மணலி, திருவொற்றியூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டல் மற்றும் பழைய இரும்பு கடையில் எரிந்த தீயை சுமார் ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் ஓட்டல் மற்றும் பழைய இரும்பு கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. இதுபற்றி சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story