திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 7:04 PM GMT)

திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆரா.சு.பிரகா‌‌ஷ் தலைமை தாங்கினார். நாகை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு பேசினார். கோட்டூர் ஒன்றிய செயலாளர் கவாஸ்கர், மாநில செயலாளர் முருகையன், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மீனாட்சிசுந்தரம், நில உரிமை மீட்பு கழக துணை செயலாளர் பூமிநாதன் மற்றும் இஸ்லாமிய அமைப்பு மாவட்ட செயலாளர் நூறு, கூத்தாநல்லூர் ஒன்றிய செயலாளர் ராபின்செல்வன், திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ஹாஜா உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.25 லட்சம் இழப்பீடு

மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் எழுப்பப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்து 17 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த மக்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சுவர் எழுப்பிய உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுகுமார் நன்றி கூறினார். 

Next Story