போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது


போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 4:00 AM IST (Updated: 10 Dec 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் போலீஸ்காரரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் சங்கரன்கோவில்-கழுகுமலை சாலையில் உள்ள பள்ளிவாசல் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக திருமணத்திற்கு வந்தவர்கள் பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடித்தனர். அவர்களை செந்தில்குமார் பட்டாசுகள் வெடிக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். 

பின்னர் செந்தில்குமார் காந்திநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகன் மகன் மகே‌‌ஷ் (வயது 39) உள்ளிட்ட 3 பேர் செந்தில்குமார் வீட்டிற்கு வந்து அவரிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் செந்தில்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story