மனைவி வீட்டைவிட்டு சென்ற விரக்தியில்: 2 குழந்தைகளை கொன்று பிளம்பர் தற்கொலை - செம்பூரில் பரிதாபம்
செம்பூரில் மனைவி வீட்டைவிட்டு சென்ற விரக்தியில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, பிளம்பர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை,
இதனால் ருபாலி கணவரிடம் கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். தினேஷ் தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தினேசின் வீட்டுக்கு அவரது தம்பி சென்றார். அவர் நீண்ட நேரமாக தட்டியும் தினேஷ் கதவை திறக்கவில்லை. மேலும் வீட்டுக்குள் குழந்தைகள் சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, வீட்டுக்குள் தினேஷ் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். குழந்தைகளும் பேச்சு மூச்சின்றி கிடந்தன.
தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மனைவி வீட்டைவிட்டு சென்ற விரக்தியில் தினேஷ் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தினேஷ் குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றாரா? அல்லது கழுத்தை நெரித்து கொன்றாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதி செய்யப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story