நெல்லை-தென்காசி மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? போலீசார் அதிரடி சோதனை


நெல்லை-தென்காசி மார்க்கெட்டுகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 10 Dec 2019 4:15 AM IST (Updated: 10 Dec 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் உள்ள மார்க்கெட்களில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை, 

இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெங்காயத்தை பதுக்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அப்படி வெங்காயம் பதுக்குவதை தடுப்பதாக தமிழக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் உத்தரவின் பேரில், மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அறிவுரையின் பேரில், துணைபோலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் ஆகிய மார்க்கெட்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் எங்கும் வெங்காயம் பதுக்கிவைக்கப்பட்டது தெரியவில்லை. தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் யாராவது வெங்காயம் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தால் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்போன் நம்பர் 9840923723, சப்-இன்ஸ்பெக்டர் செல்நம்பர் 9498143651 ஆகியவைகளுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பு, சப்-இன்ஸ்பெக்டர் சேக்அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Next Story